சேலத்தில் தாயின் உடலுக்கு சிதை மூட்டிய பெண்
சேலம்:
பெண் குழந்தை பிறந்தாலே கொன்றுவிடும் அல்லது பிறக்கப்போவது பெண் குழந்தை என தெரிந்தாலேகருவிலேயே பெண் குழந்தையை கொன்று விடும் இந் நாளில் சேலத்தில் ஒரு பெண் தாய்க்கு மகன் செய்யவேண்டிய இறுதி, ஈமச் சடங்குகளை தானே செய்துள்ளார்.
சேலம் அன்னதானப்பட்டி அவ்வையார் தெருவில் வசித்து வருபவர் பாப்பாத்தி(98). இவரது கணவர்அர்ஜினபத்தர் முன்னரே இறந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு 6 மகள்களும், 1 மகனும் உண்டு.
மகன் கிருஷ்ணன் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குடும்பத்தை விட்டு தனியே வசித்து வருகிறார்.இவர் தன் தந்தை இறந்த போது கூட கடைசி நேரத்தில் வந்து தன் தந்தை சிதைக்கு எரியூட்டி விட்டு சென்றுவிட்டார்.
குடும்ப பாரத்தை பாப்பாத்தியின் மகள் ராஜகுமாரி(46) , பாப்பாத்தியின் கடைசி மகள் மாணிக்கம் இருவருமேசுமந்து வந்தனர். இவர்கள் மிட்டாய் விற்று அதில் வரும் பணத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றி வந்தனர்.குடும்ப பாரத்தை சுமக்க வேண்டும் என்பதற்காக ராஜகுமாரி திருமணமே செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் பாப்பாத்தி புதன்கிழமை மரணமடைந்தார். இவர் வீட்டிற்கு அடுத்த தெருவில் வசிக்கும் மகனைதாயின் இறுதிச் சடங்கை செய்ய அழைத்தனர். அவர் வரமறுத்து விட்டார்.
ராஜகுமாரி கோபமுற்று தாய்க்கு மகன் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கினை தானே செய்ய முடிவெடுத்தார்.பெண்கள் இடுகாடு வரை செல்வது கிடையாது. அந்த தடையையும் முறித்து இடுகாடுவரை சென்று தாயின்சிதைக்கு தீ மூட்டி இறுதிச் சடங்கை முடித்தார்.
புத்தாண்டில் முதல் பெண் சிசுக்கொலை நடந்தது சேலத்தில்தான், தற்போது ஒரு பெண் மகன் செய்யவேண்டியஇறுதிச் சடங்குகளை மகளே செய்து சாதனை புரிந்திருப்பதும் சேலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications