அதிரடிப்படை நடவடிக்கையை நிறுத்த முயற்சிப்பேன்:நெடுமாறன்
திருச்சி:
தமிழக, கர்நாடக முதல்வர்களை சந்தித்து வீரப்பனைத் தேடும் கூட்டு அதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டையைத் தடுத்து நிறுத்தச் சொல்லுவேன் என்றுதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிப்பதற்காக அதிரடிப்படையினர் சத்யமங்கலம் காட்டுக்குள் தேடுதல் வேட்டையைத் தொடங்கி விட்டனர். இதனால் சத்யமங்கலம் காட்டுப்பகுதியில் வசித்து வரும் 9000 க்கும் மேற்பட்ட மக்களையும் அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்துவார்கள். இதனால் அவர்களது வாழ்க்கையே அழியும்அபாயம் ஏற்படும்.
ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வீரப்பன் கோரியிருந்தார். வீரப்பன் நிறைவேற்றக்கோரிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஏற்கனவே இரு மாநில அரசுகளும் உறுதியளித்திருந்தன.
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து சிறைக்கைதிகள் மற்றும் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க இரு மாநிலஅரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. அவர்கள் விரைவில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்பலாம்.
இரு மாநில அரசுகளும் வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தால் வீரப்பனை விரைவில் சரணடைவதற்கான அனைத்துமுயற்சிகளையும் தாமதமின்றிச் செய்வேன்.
வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்டு வந்தததைப் பாராட்டி, பெங்களூரில் சனிக்கிழமை பாராட்டு விழா நடக்கிறது. அந்தப் பாராட்டு விழாதிட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
அப்போது கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை சந்திக்கும் எண்ணம் எதுவுமில்லை.
சண்டைநிறுத்தம்:
இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் இலங்கை அரசும், அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் விடுதலைப்புலிகள் மேல் வைக்கப்பட்டிருக்கும் போது தடையை நீக்க மத்திய அரசுமுன்வர வேண்டும் என்றார் நெடுமாறன்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications