காட்டுக்குச் செல்லத் தயார்: முன்னாள் டி.ஜி.பி.தேவாரம்
ஊட்டி:
வீரப்பன் வேட்டைக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால், காட்டுக்குள் செல்லத் தயாராக இருக்கிறேன் என முன்னாள் டி.ஜி.பி தேவாரம் தெரிவித்தார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கப் பதவியிலிருந்த போது நேரடியாக களத்தில் இறங்கியவர் தேவாரம்.கோவை அருகே உள்ள டி.எஸ்.பி சிதம்பரநாதனை வீரப்பன் கடத்திச் சென்ற போது அவரை மீட்கும் பணியில்தேவாரம் முன்னின்று நடத்தினார். பல அதிரடி நடவடிக்கைகளின் போது அவரே துப்பாக்கி ஏந்தி, காட்டுக்குள்சென்றவர். இவர் ஊட்டியில் முன்னாள் டி.ஜி.பி தேவாரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
வீரப்பனுடன் இப்போதுள்ள படைகள் அதிகரித்து விட்டன. வீரப்பனைப் பிடிக்க 89ம் ஆண்டு முதல் 93ம் ஆண்டுவரை மேற்கொண்ட நடவடிக்கையால், அவனது கூட்டாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
300 பேர் அப்போது அவனுடன் இருந்தனர். இவர்கள் 95ம் ஆண்டு டி,எஸ்.பி சிதரம்பரநாதனை வீரப்பன் கடத்திச்சென்ற போது நடந்த அதிரடி நடவடிக்கையால், வெறும் 5 பேர் மட்டுமே அவனுடன் இருந்தனர். ஆனால்இப்போது தமிழ் தசிய தீவிரவாதிகள் என ஒரு பெரும் கும்பலே அவனுடன் சேர்ந்து விட்டது.
சரணடைகிறேன், சரணடைகிறேன் என ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் வேலையைத் தான் வீரப்பன்மேற்கொண்டு வந்திருக்கிறான். 130 வழக்குகளில் மாட்டிக் கொண்டுள்ள வீரப்பன், சரணடையவே முடியாது.சரணடையவும் மாட்டான். அவனைப் பிடிக்க புதிய படை ஒன்றை உருவாக்கினால் அந்தப் படையில் நான் இடம்பெறவும், அவனைச் சென்று தேடவும் தயாராக உள்ளேன். அதற்கான வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட வேண்டும்.
காட்டுக்குள் 10, 15 குழுக்களாக பிரிந்து சென்று அங்கேயே தங்கி தேடுதல் வேட்டையை நடத்தினால் நிச்சயம்வீரப்பனைப் பிடிக்க முடியும். காட்டை விட்டு எங்கும் அவன் தப்பிச் சென்று விட முடியாது. காட்டுக்குள் இருப்பதுதான் அவனுக்கு பலம். இலங்கைக்குத் தப்பிச் சென்று விடுவான் எனக் கூறுவதெல்லாம் நம்பத் தகுந்தது அல்ல.
நவீன ராடார் கருவியாலும் வீரப்பனைக் கண்டுபிடிக்க முடியாது. ஹெலிகாப்டரில் பறந்தாலும் முடியாது. இதுநமக்குப் பயன் தராது. காட்டுக்குள் ஏதோ ஒரு இடத்தில் பதுங்கி இருக்கும் வீரப்பனை கண்டுபிடிக்க வேண்டும்.அவனைத் தேடும் வேட்டையை ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட உடனேயே மேற்கொண்டிருக்க வேண்டும். எல்லைப்பாதுகாப்பு படையை விட, கர்நாடக, தமிழக அதிரடிப்படையினர் சிறப்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட முடியும்என்றார் தேவாரம்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications