பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதிக்குத் தடை
மதுரை:
மாணவர்களின் இடைநிலை பள்ளிச் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ்களில் ஜாதி, இனம், மதம்போன்றவற்றை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளியில் வழங்கப்படும் விண்ணப்பங்களில் மாணவர்களின் ஜாதி, மதம், இனம், உள்பட அனைத்துவிவரங்களும் கேட்கப்படுகின்றன. அதே போல் பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறும் போதும் பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் ஜாதி, மத விவரங்கள் குறிப்பிடப்படுகின்றன.
ஆனால் இது போன்று ஜாதி, மத விவரங்களை குறிப்பிடத் தேவையில்லை என்று கடந்த 1973 ம் ஆண்டு அரசுஅறிவுறுத்தியது. இது நடைமுறைப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 31 ம் தேதி அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இடைநிலை பள்ளிச்சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ்களில் ஜாதி, சமயம் இல்லை என்றோ அல்லது அந்தஇரு பத்திகளுக்கும் எதிரே உள்ள இடத்தை காலியாக விடவோ விரும்பினால் அவர்கள் அப்படிச் செய்யலாம்என்று பள்ளி கல்வி இயக்குநருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அது சரியாகக்கடைபிடிக்கப்படவில்லை.
அதனால் இனி வரும் காலங்களில் இதைக் கடைபிடிக்கும்படி பள்ளி கல்வி இயக்குநர் மற்றும் துவக்கக் கல்விஇயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications