போலீஸாரை சிறைபிடித்த வீரப்பன் ஆதரவாளர்கள்
ஈரோடு:
ஈரோடு அருகே வெள்ளோட்டப் பரப்பு என்ற இடத்தில் வீரப்பனுக்கு ஆயுதங்கள் வழங்கிய வழக்குத் தொடர்பாக கைது செய்யச் சென்ற போலீசார்"சிறைபிடிக்கப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படையினர் பண்ணாரி காடுகள் உள்பட பல இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 93ம் ஆண்டு இந்த தேடுதல் வேட்டையின்போது கொளத்தூர் அருகே இந்த தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது வீரப்பனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ததாகஅதிரடிப்படையினர் 5 பேரைக் கைது செய்தனர்.
பர்கூர் அருகே உள்ள வெள்ளோட்டம்பரம்பு என்ற ஊரில் இருந்த கனகராஜ் மற்றும் கதிர்வேல் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நீதிமன்றம் வாராண்ட் பிறப்பித்துள்ளது. இவர்களைப் பிடிக்க போலீசார்வெள்ளோட்டப்பரம்பு சென்றனர். அங்கு போலீசார் கதிர்வேலைக் கைது செய்ய விடாமல், தடுத்து நிறுத்தினர்.
மேலும் அதிகாரிகளையும், போலீசாரையும் சிறை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த சப் கலெக்டர் மற்றும் கூடுதல் படையினர்அங்கு சென்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிக்க ஏற்பாடு செய்தனர்.
பின்னர், கதிர்வேல் மற்றும் கனகராஜ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பிறகு ஜாமீனில் விடுவிக்கலாம் என அதிகாரிகள் யோசனைதெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சமாதனமடைந்து அதிகாரிகளை விடுதலை செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications