ஹஜ் .. சிறப்பு விமானம் விடுகிறது ஏர் இந்தியா
சென்னை:
ஹஜ் யாத்திரைக்காக சென்னையிலிருந்து ஜெட்டா நகருக்கு ஏர் இந்தியா சிறப்புவிமான சேவையை துவக்க உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12 -ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒரு விமானத்தில்315 ஹஜ் யாத்ரிகர்களை ஏற்றிச் செல்லும் விதமாக சிறப்பு விமான சேவையை ஏர்இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக ஹஜ் கமிட்டி கூட்டம் வருவாய்துறை அமைச்சர் ரகுமான்கான் தலைமையில்நடந்தது. இந்த கூட்டத்தில் யாத்ரிகர்களுக்கு ஹஜ் செல்வதற்கு எந்த விதமானஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரிகர்கள் பாய்த்புல் ஹுஜாஜ்ஜில் யாத்திரைசெய்யும் நாட்களுக்கு இரன்டு நாள் முன் வந்து அவர்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அவர்கள் செல்ல வேண்டிய விமானம் குறித்த விவரங்களையும், பயணத்திற்குதேவையான ஆவணங்களையும் அப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்தகூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பயணிகள் திரும்பி வருவதற்கான விமானம் மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து ஏப்ரல்மாதம் 3-ம் தேதிவரை இயக்கப்படும் என அந்த குழு மேலும் தெரிவித்தது.
1998-ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த காஜாமொய்தீனின்பெற்றோருக்கு ஹஜ் யாத்திரைக்கு பயணத் தொகையில் 50 சதவிகிதம் சலுகையும், ரூ37,500 உதவித் தொகையும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஹஜ் யாத்திரிக்கை செல்ல சிறந்த விதத்தில் உதவி செய்த ஏர்இந்தியா, விமான நிலைய ஆணையம், சுங்கத்துறை மற்றும் குடியேற்றப் பிரிவு, சிவில்விமான போக்குவரத்து மற்றும் போலீசுக்கும் அமைச்சர் விருதுகள் வழங்கிகவுரவித்தார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications