மல்லேஸ்வரியை நாடும் அரசியலும், சினிமாவும்
டெல்லி:
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு எடை தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாங்கிய கர்ணம் மல்லேஸ்வரிக்கு அரசியலில் நுழைவதற்கும்,சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்புக்கள் வந்துள்ளன.
இதுகுறித்து ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
சிலர் என் பெற்றோரை அணுகி திரைப்படங்களில் நடிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறார்கள். அதாவது படங்களில் ஒரு போலீஸ் அதிகாரியாகவோ அல்லதுவிளையாட்டு வீரராகவோ நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். இதுபற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
மேலும் அரசியலில் நுழையவும் எனக்கு சில கட்சிகளிடமிருந்து அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் எடை தூக்கும் அகாடமி ஒன்றைஅமைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்.
இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புக்களிடமிருந்து நிதி வசூல் செய்து அகாடமி தொடங்கவுள்ளார். வெண்கலப்பதக்கத்தைப் பெற்ற பின் எனக்கு என்குடும்பத்தைக் கவனிப்பதற்கு நேரமே இருப்பதில்லை. விழா நேரங்களில் குடும்பத்தாருடன் செலவிட முடியவில்லை. எப்போதுமே விளையாட்டு, விளையாட்டுஎன்ற ஒரே சிந்தனையாக இருக்க வேண்டியதிருக்கிறது என்றார் மல்லேஸ்வரி.
இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு 69 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications