சட்டசபை முன்பு பா.ம.க. ஆர்ப்பாட்டம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி போலீஸாருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாண்டிச்சேரியில் வெள்ளிக்கிழமைசட்டசபை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாண்டிச்சேரி போலீஸார், டெல்லி போலீஸாருக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அடிப்படை மற்றும் விருப்பப் படிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றுகோரி வருகின்றனர். மேலும், காவலர் சங்கம் ஆரம்பிக்கவும் அவர்கள் அனுமதி கோருகிறார்கள்.
இதை ஆதரித்தே பாண்டிச்சேரி சட்டசபை முன்பு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, போலீஸாரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உயர் மட்டக கமிட்டி அமைத்து சுமூகத் தீர்வு காணவேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக தலைவருமான டி.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நா.ரா.கலைநாதன் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசின் புதியஉத்தரவால் காவலர்கள் மாதம்தோறும் ரூ. 2000 முதல் ரூ. 3500 வரை ஊதியத்தை இழப்பார்கள். போலீஸார் தனிச்சங்கம் அமைக்க மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications