ஒரே ஜாதி .. சில கட்சிகள் .. ஒரு கூட்டணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ஜாதிக் கட்சிகள் சில சேர்ந்து புதிதாக தமிழக ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணியைஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் மூன்றாவது அணி எப்போது வரும் என்ற கேள்விக்கு இதன் மூலம் விடை கிடைத்துள்ளது. புதிய நீதிக்கட்சி என்ற கட்சியின் தலைமையில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. புதிய கூட்டணியில், இடம் பெற்றுள்ளகட்சிகள், முதலியார்கள், வெள்ளாளர்கள் ஆகியோரை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சிகள்.

புதிய நீதிக் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, தாயக மக்கள் கட்சி, தமிழ்நாடு பிள்ளைமார் பேரவை ஆகியவையேதமிழகத்தின் தலையெழுத்தை "மாற்றியெழுதப் புறப்பட்டிருக்கும் புதிய கட்சிகள்.

எங்கள் கூட்டணியில் வந்து சேருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அழைத்துள்ளோம். வந்தால் அவரேகூட்டணிக்குத் தலைவர் என்று கூறினார், இந்த "3-வது அணியின் தலைவர் ஏ.சி.சண்முகம். இவர் புதிய நீதிக்கட்சியின் தலைவர்.

கூட்டணி அமைப்பது குறித்து மேற்சொன்ன கட்சிகளுடன் சண்முகம் வெள்ளிக்கிழமை தீவிர ஆலோசனைநடத்தினார். பின்னர் புதிய கூட்டணி அமைந்தது.

கூட்டணி குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகம் பேசுகையில், கூட்டணியில் மேலும் பல கட்சிகளைக்சேர்க்கவுள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், மக்கள் தமிழ் தேசக் கட்சித்தலைவர் கண்ணப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் ஆகியோருடன் பேசிக்கொண்டுள்ளோம்.

த.மா.கா. தலைவர் மூப்பனாரையும் எங்கள் அணிக்கு அழைத்துள்ளோம். வந்தால் அவரே கூட்டணிக்குத் தலைவர்.

தமிழகத்தைப் பொருத்தவரை திமுக, அதிமுக மட்டும்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும்இல்லை. அந்தக் கட்சிகளில் தேர்தலையொட்டி இட ஒதுக்கீடு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டு, சில கட்சிகள்வெளியேறலாம். அப்படி வெளியேறும் கட்சிகளை எங்கள் கூட்டணியில் சேர்க்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+