சின்னப்பிள்ளைக்கு விருது வழங்கினார் கருணாநிதி
சென்னை:
மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளையை தமிழக முதல்வர் திங்கள்கிழமைதிருவள்ளுவர் தினத்தையொட்டி நடந்த விழாவில் கவுரவித்தார்,
மதுரையின் புலிசேரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண்மணிக்கு அவரதுகிராமத்தில் சிறந்த சமூக சேவை செய்ததற்காக பிரமதர் வாஜ்பாயால் ஸ்ரீ சக்தி புரஸ்கார்விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் போது அனைவர் நெஞ்சும் நெகிழும்விதமாக சின்னப்பிள்ளையின் காலை தொட்டு வணங்கினார் பிரதமர்.
அதன் பின்னர் சின்னப்பிள்ளையை தமிழக அரசு கவுரவிக்கும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சென்னை திருவள்ளுவர் கோட்டத்தில்திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் கருணாநிதி சின்னப்பிள்ளையைகவுரவித்தார்.
திங்கள்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழா முக்கியமாக குறள்பீட விருதுபெற்றவர்களுக்கு விருது வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவாகும்.இந்த நிகழ்ச்சியிலேயே சின்னப்பிள்ளையையும் கவுரவிக்க முடிவு செய்த முதல்வர்கருணாநிதி சின்னப்பிள்ளைக்கு ரூ 1 லட்சம் அடங்கிய பொற்கிழியை பரிசாக வழங்கிகவுரவித்தார்.
குறள்பீட விருதுகள்:
இந்த விழாவில் குறள்பீட விருதுகள் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.பேராசிரியார் ஞானசம்பந்தனுக்கு குறள் பீட விருதும், அய்யன் திருவள்ளுவர் விருதுமுனைவர் வா.மு. சேதுராமனுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் பல பிரிவுகளில் குறள் பீட விருது பெற்றோர் விவரம் வருமாறு:
கவிதை பிரிவில் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும், அறிவியல் துறையில் மணவைமுஸ்தபாவுக்கும், கிராமியக் கலையில் முனைவர் லோர்டுக்கும், சிறந்த மொழிபெயர்பாளருக்கான விருது சேஷநாராயணனுக்கும், ஆய்வியல் விருதுஇளவேனிலுக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக காலை கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழ் மொழி மற்றும்பண்பாட்டு வளர்ச்சி துறை அமைச்சர் தமிழ்குடிமகன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறைஅமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோர் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
யு.என்.ஐ.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications