குண்டுவீச்சிலிருந்து உயிர் தப்பினார் பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவீச்சு நடந்தது.அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஹப்பாகாதலில் இருக்கும் புதிய பாலம் ஒன்றைதிறந்து வைத்து பேசினார். அவர் பேச்சை முடிக்கும் தருவாயில் தீவிரவாதிகள் துப்பாக்கிள்மூலம் எறியும் இரண்டு குண்டுகளை வீசினர்.
இதில் ஒரு குண்டு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்த நதியில் விழுந்தது.மற்றொன்று கூட்டம் நடந்த இடத்திற்கு 100 அடி தொலைவில் விழுந்து வெடித்தது.
இந்த வெடிகுண்டுகள் ஃபரூக் அப்துல்லாவை குறி வைத்து எறிந்ததாக கூறப்படுகிறதுகுண்டுகள் தள்ளிவிழுந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும்அதிர்ஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து போலீசார் எதிர் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள்பாபாநெம் என்ற பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்ததாக்குதலுக்கு ஹிஸ்புல் மூஜாஹுதின் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
குண்டு வீச்சிற்கு பின்பும் தொடர்ந்து பேசினார் ஃபரூக் அப்துல்லா. அவர் பேசுகையில்,துப்பாக்கி குண்டுகளால் என்னை பயமுறுத்த முடியாது. காஷ்மீரில் மீண்டும் அமைதியைகொண்டு வர வேண்டும் என்ற என் முடிவை இது போன்ற சம்பவங்கள் மூலம் மாற்றமுடியாது.
காஷ்மீர்அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீர்மக்கள் பிரதிநிதிகளை இணைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற ஹரியாத்மாநாட்டின் கோரிக்கையை ஏற்க முடியாது. இதனால் எந்த விதமான பயனும் ஏற்படாதுஎன பேசினார்.
ஃபரூக் அப்துல்லா பேசி முடித்தவுடன் அவரை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாகஅழைத்துச் சென்றனர். மாலை அவர் ஜம்மு கிளம்பி சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications