மேட்ச் - பிக்சிங் முக்கிய குற்றவாளி கைது
லண்டன்:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் சாவ்லா,ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
லண்டணில் துணிக்கடை வைத்திருக்கும் சஞ்சீவ் சாவ்லா இந்திய மற்றும் சர்வதேசஅளவில் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி வந்தார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சென்ற ஆண்டு விளையாடிய போதுதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலைவர் ஹான்சி குரோனியேவுடன் சஞ்சீவ்சாவ்லா மேட்ச் பிக்சிங் தொடர்பாக செல் போனில் நடத்திய பேச்சு வார்த்தைகளைடெல்லி போலீசார் பதிவு செய்தனர்.
தென்னாப்பிரிக்க அணி சென்ற இடங்களுக்கெல்லாம் இவர் சென்று அவர்கள் தங்கியஓட்டலிலேயே தங்கி பேரம் பேசி வந்தார். இந்த விஷயம் டெல்லி போலீசாரால்கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணித் தலைவர் ஹன்சிகுரோனியே உள்ளிட்ட சூதாட்டத்திற்கு உடந்தையாக இருந்த தென்னாப்பிரிக்கவீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த ஏஜென்டுகளானசர்மா, இந்தி நடிகர் கிஷன் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சஞ்சீவ் சாவ்லா லண்டனில் வசித்து வருவதால் அவரை கைது செய்ய ஸ்காட்லாந்துயார்டு போலீசின் உதவி நாடப்பட்டது.
இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிரிஸ் லூயிஸ் தனக்கு லஞ்சம் தர சாவ்லாமுயன்றதாக வாக்குமூலம் தந்தார்.இது குறித்து விசாரணை செய்த ஸ்காட்லாந்து யார்டுபோலீஸ், வடக்கு லண்டனில் ஹென்டண் என்ற இடத்திலிருக்கும் சாவ்ாலவின்வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.
இவரிடம் கிரிக்கெட் விசாரணை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குரோனியே இவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளதால் அவரிடமும் விசாரணைநடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த முகேஷ் குப்தா என்ற சூதாட்ட ஏஜென்டிடம் சி.பி.ஐ. விசாரணைசெய்த பின்தான் பல உண்மைகள் வெளியாகின. இதனடிப்படையில்தான் அசாருதீன்,பிரபாகர், ஜடேஜா, அஜய் சர்மா மற் றும் வெளிநாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட்சூதாட்டத்தில் இருந்த தொடர்பு வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாவ்லா கைது செய்யப்பட்டிருப்பதால் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில்பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications