கொலை வழக்கு .. துணை மேயரின் 5 நண்பர்கள் கைது
மதுரை:
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரை துணை மேயர் மிசா. பாண்டியனின் ஐந்து கூட்டாளிகள், சிறப்புப்போலீஸ் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை நகர போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியைச் சேர்ந்தசகாதேவன், சேகர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், பழனியப்பன், மதுரையைச் சேர்ந்த ராமராஜன்ஆகிய ஐந்து பேரும் சிறப்புப் போலீஸ் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மிசா. பாண்டியனுக்குவேண்டியவர்கள்.
மிசா. பாண்டியன், அவரது டிரைவர் ஆகியோருக்கு போலி பெயர்களில், மைசூருக்குப் போவதற்கு,பழனியப்பனும், ராஜேந்திரனும் ரயில் டிக்கெட் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
சகாதேவனும், சேகரும், பாண்டியன் தங்குவதற்கு இட வசதி செய்து கொடுத்துள்ளனர். கூட்டுறவுத் துறைஊழியரான ராமராஜன், பாண்டியனுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இவர்களிடம் நடத்த விசாரணையில், பாண்டியன், அவரது டிரைவர் மற்றும் ஒரு நண்பர் ஆகியோர் சமீபத்தில்திருச்சிக்கு தப்பிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் தவிர கொலை வழக்கு தொடர்பாக மிசா. பாண்டியனின் மைத்துனர் ராஜா என்பவரையும் போலீஸார்தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications