ராமேஸ்வரம் கோவிலுக்கு ரூ. 2 கோடியில் தங்கத் தேர்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுள்ள அம்மனுக்கு ரூ. 1 கோடி செலவில் தங்கத்தேர் தயாராகி வருகிறது.
ராமநாதசுவாமி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் கொண்டாடப்படவுள்ளது.இதையொட்டி அம்மனுக்கு ரூ. 1 கோடி செலவில் தங்கத் தேர் செய்ய முடிவுசெய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
கோவில் இணை கமிஷனர் பக்கிரிச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், 168 கிலோவெள்ளி, 16 கிலோ தங்கம் ஆகியவற்றைக் கொண்டு தேர் தயாரிக்கப்படுகிறது. தேரின்உயரம் 17.5 அடி. இந்தத் தேர்தான் தமிழகத்திலேயே மிகவும் உயரமான தேராகும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலிருந்து வந்துள்ள
30 சிற்பக் கலைஞர்கள் தேர் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ராஜஸ்தான் கலைஞர்கள் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5-ம் தேதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. கோவில் புதுப்பிப்புப் பணிகள் மற்றும்கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பணிகளுக்காக இதுவரை ரூ. 2 கோடி வரைசெலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications