நோபல் பரிசுக்கு ஆசைப்படுகிறார் வாஜ்பாய் .. சுவாமி
சென்னை:
பிரதமர் வாஜ்பாயியின் காஷ்மீர் கொள்கை மிகவும் அபாயகரமானது என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் தொடர்பான பிரதமர் வாஜ்பாயியின்அணுகுமுறைகள், செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவை, நாட்டை சீர்குலைக்கக் கூடியவை. நாட்டின்பிரிவினையில்தான் இது முடியும்.
ஹூரியத் மாநாடு என்ற மூன்றாவது உறுப்பினரை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையில் நுழைக்கபிரதமருக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியல் சட்டப் பிரிவு ஒன்றை மீறுவதாகும்.
இந்தியாவுடன், காஷ்மீர் இணைந்து இருக்க வேண்டும் என்றுதான் அரசியல் சட்டப் பிரிவு ஒன்று கூறுகிறது,பிரிவினை குறித்து அது பேசவில்லை. மாறாக, இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்க வேண்டும், என்று ஹுரியத்மாநாடு அமைப்பு கூறி வருகிறது.
ஹூரியத் அமைப்பினர் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச முடியும் என்றால், காஷ்மீர் பண்டிட்டுகள் (காஷ்மீர்இந்துக்கள்) கூட சமாதானம் குறித்துப் பேச முடியும். அவர்களும் இந்தியர்கள்தானே, அவர்களை மட்டும்புறக்கணிப்பது நியாயமாக இருக்காது.
பாகிஸ்தானின் முஷாரப்புடன் பேச ஒரு பக்கம் பிரதமர் வாஜ்பாய் மறுக்கிறார். மறு பக்கம்,ஹூரியத் அமைப்புபோன்ற பிரிவினைவாத அமைப்புகளை ஆதரிக்கிறார். காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுடன்மட்டுமே பேச வேண்டும், ஹூரியத் அம்ைபபுடன் பேசக் கூடாது.
நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக சோவியத் யூனியனைக் கூறு போட்டார் கார்பசேவ். அது போல,தனக்கும் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேச நலனை தியாகம் செய்யத் துணிந்து விட்டார்வாஜ்பாய் என்று கூறியுள்ளார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications