வேலூர் சிறையில் மிசா.பாண்டியன்
சென்னை:
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை துணை மேயர் மிசா பாண்டியன்செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த பின் புதன் கிழமை காலை வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை துணை மேயர் மிசா.பாண்டியன், மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தஜெகதீசன் என்பவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
அவர் போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக ஒரு மாதம் தலை மறைவாக இருந்துவந்தார். இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த போலீசாரிடம் வரிச்சியூர் செல்வம்என்பவர் சிக்கினார். அவர் மிசா பாண்டியன் கூறிய படியே, தான் ஜெகதீசனைகொன்றதாக ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் மிசா.பாண்டியன் தி.மு.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேலும் இரண்டு கார்ப்பரேஷன் கவுன்சில் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லைஎன்றால் அவர் துணை மேயர் பதவியை துறக்க வேண்டும் எனவும் தி.மு.க.தலைமையால் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை செங்கல்பட்டு கோர்ட்டில் பாண்டியன் சரண்அடைந்தார். அவரை, வேலூர் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார். அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மைசூர் ஓட்டல்உரிமையாளர் ஒருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மதுரை போலீசார் மிசா பாண்டியனை விசாரணை செய்ய தங்களிடம்ஒப்படைக்குமாறு நீதிமனறத்தை கேட்டுக் கொள்வர் என தெரிகிறது.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications