அசாருதினின் மர்ம போன் .. மும்பை செல்கிறது ராஜ்காட் போலீஸ்
ராஜ்காட்:
1996-ம் ஆண்டு இந்திய - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியினர் தங்கியிருந்த ஒட்டலிலிருந்து அசாரூதீன்,அஜய் ஜடேஜா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய விவரங்கள் குறித்துவிசாரிக்க ராஜ்காட் போலீசார், மும்பை செல்லவிருப்பதாக ராஜ்காட் போலீஸ்கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் விகாஸ் என்ற வழக்கறிஞர் 1996-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாஆடிய போட்டி ஃபிக்ஸ் செய்த போட்டி என சி.பி.ஐ. கூறியுள்ளது. இதனால், என்னைப்போன்ற பல ரசிகர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். எனவே இது குறித்த போலீஸ்விசாரணை செய்ய வேண்டும் என மனு செய்திருந்தார்.
அந்த மனுவின் பேரில் ராஜ்காட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜ்காட்டில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த ஒரு நாள்போட்டியின் போது இந்திய அணியினர் ஓட்டல் சில்வர் பேலசில் தங்கியிருந்தனர்.அப்போது அசாருதீனும், அஜய் ஜடேஜாவும் பலரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அது குறித்து விசாரிக்க ராஜ்காட் போலீஸ் மும்பைசெல்லவிருக்கிறது.
இந்த தகவலை உறுதி செய்து ராஜ்காட் போலீஸ் கமிஷனர் சுதீர் சின்ஹா அளித்தபேட்டியில் கூறியதாவது:
அசார் 6 பேருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களின் பெயர்கள்எங்களுக்கு கிடைத்துள்ளன. அஜய் ஜடேஜா தனது குடும்பத்தினரிடம் மட்டுமேதொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ராஜ்காட் போலீஸ் சி.பி.ஐ. தயாரித்துள்ள அறிக்கையை தருமாறு கேட்டுள்ளது.ஆனால் இது குறித்து சி.பி.ஐ.யிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.
ஆனாலும் சி.பி.ஐ. மத்திய அரசிடம் தங்கள் விசாரணை குறித்து தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு அனுமத்தித்தால் தேவையான அனைத்து ஆவணங்களையும் எங்களால்பெற முடியும்.
சி.பி.ஐ.யிடம் இருக்கும் ஆவணங்கள் எங்கள் விசாரணைக்கு பெரிதும் உதவும்.மிண்டும் சி.பி.ஐ-க்கு இது குறித்து நினைவூட்டவிருக்கிறோம் என கூறினார்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications