இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை
அயோத்தி பிரச்சனை மீண்டும் பெரிதாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்னையின் அடிப்படையைஎடுத்துக் கொண்டால் - ஒரு கோயில் கட்டுவது என்பது ஓர் அரசியில் கட்சியின் திட்டமாக இருப்பது சற்றும்பொருத்தமல்ல.
இந்த திட்டத்தை பா.ஜ.க. என்றோ கை விட்டிருக்க வேண்டும். உத்திரபிரதேச தேர்தல் வரும்போது, அயோத்திபிடிவாதம் நல்ல பிரச்சாரமாக அமையும் என்று பா.ஜ.க. கணக்கிடலாம். ஆனால், இது மத்திய ஆட்சிக்கு ஆபத்துஏற்படுத்தக் கூடியது; அது மட்டுமல்ல, தேசத்தின் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது.
பிரதமர் கேரளத்தில் ஓய்வெடுத்த போது, எழுதிய இரு கட்டுரைகள் பல பத்திரிக்கைகளில் வெளியாகியது. அதில்ஒரு கட்டுரையில் நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது ஏற்கப்படும்; இரு மதங்களின் பிரதிநிதிகளின்இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்படுவது மற்றொரு வழி.
இதில் ஒரு வழி, மற்றொரு வழியை தடுப்பது அல்ல; இந்த இரண்டு வழிகளும் ஒன்றுக்கொன்று உதவக் கூடியவை;நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி - அது சீராக அமல்படுத்துவதற்கு , அமைதியான சமூக சூழ்நிலைவேண்டும். பேச்சு வார்த்தையின் மூலம் இதை உருவாக்க முடியும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். இது முற்றிலும்ஏற்கத்தக்க கருத்து.
இதையடுத்து, முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஒருவரும், பஜ்ரங் தள் தரப்பிலிருந்து ஒருவரும் பேச்சு வார்த்தைகளுக்குஏற்பாடு செய்யப் போவதாக அறிவித்தனர்.
உடனேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல முஸ்லிம் அமைப்புகளும், ஹிந்து அமைப்புகளும் இதை ஒரு சேரநிராகரிக்கின்றன. இதில் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை பரிபூரணமாக அமைந்தது!
நமக்கு ஒரு சந்தேகம் - அயோத்தி விவகாரத்தை தீர்த்து வைக்க, இரு மதத்தினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி,வெற்றி காண்பது சாத்தியம் என்று நினைக்கிற பிரதமர் - விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றஅமைப்புகளிடம் பேசி இந்த அயோத்தி விவகாரம், இப்போது பயங்கரமாக வெடிப்பதற்கு வாய்ப்பில்லாமல்பார்த்துக் கொள்ள முடியும் என்று நம்பவில்லையா?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications