தேர்தலில் நிற்க குற்றவாளிகளுக்குத் தடை .. கில் ஆலோசனை
டெல்லி:
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர்எம்.எஸ்.கில் ஆலோசனை தெரிவித்தார்.
தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில், தேர்தல் கமிஷனர்கள் லிங்டோ, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் கடந்த காலத்தை அறிய வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது. ஹைகோர்ட்டின் இந்தஉத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய பரிசீலித்து வருகிறது.
இப்போதுள்ள சட்டப்படி குறைந்த பட்சம் 2 ஆண்டு தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பது எனது சொந்த கருத்து. அரசுதான்இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கவர்னர் மூலம் ஆட்சி நடத்தலாம். எதிர்க்கட்சிகளுக்கு கவர்னர் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர் நிர்வாகம் செய்ய முடியும்.
வெற்றி பெறும் வேட்பாளர்கள் 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்க வேண்டும். அப்படி வாங்காவிட்டால் முதல் 2 இடத்தைப் பிடிக்கும்வேட்பாளர்களுக்கு இடையே 2 வது தேர்தல் நடத்த வேண்டும்.
2025 ம் ஆண்டு தேர்தல் நடைமுறை எப்படி இருக்கும் என்பது குறித்து எதுவும் கூற முடியாது. அப்போது வேட்பாளர்கள் டெலிவிஷன் மூலம் பிரசாரம்செய்வார்கள். மக்கள் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டர் மூலமாக ஓட்டு போடுவார்கள். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே தேர்தல் முடிவு தெரிந்து விடும்என்றார் கில்.












Click it and Unblock the Notifications