குடியரசு தின விழா .. அல்ஜீரிய அதிபர் விருந்தினர்
டெல்லி:
இந்திய குடியரசு தின விழாவில் அல்ஜீரிய அதிபர் அப்டெலாசிஸ் போட்பிளிக்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் 51 வது குடியரசு தின விழா வரும் 26 ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் அதிபரோ அல்லது பிரதமரோவிருந்தினராக கலந்து கொள்வார். இந்த ஆண்டு, சிறப்பு விருந்தினராக அல்ஜீரிய அதிபர் கலந்து கொள்ளவிருக்கிறார்.
அல்ஜீரிய அதிபர் அப்டெலாஸிஸ் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனவரி 24 ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வரும் அவர் குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில்துறை அமைச்சர்முரசொலி மாறன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது அதிபர் அப்டெலாஸிஸ் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களைப் பார்வையிடுகிறார். இந்தியாவில் வேளாண்மைஆராய்ச்சி, விமானப்பிரிவு, விண்வெளி ஆராய்ச்சி, எண்ணெய்க்கிணறுகள் ஆராய்ச்சி ஆகியவவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்துப்பார்வையிடுகிறார்.
இது தவிர இந்திய வர்த்தக மற்றும் தொழில்வர்த்த சபை மற்றும் இந்திய தொழிலக சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மத்தியில் சிறப்புரைஆற்றுகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications