சண்டை நிறுத்தம் நீடிக்காது .. எச்சரிக்கிறார்கள் புலிகள்
கொழும்பு:
இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தால் சண்டைநிறுத்தத்தை நீடிக்க மாட்டோம் என்றுவிடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர்.
விடுதலைப்புலிகள் கடந்த மாதம் 24 ம் தேதி இரவு சண்டைநிறுத்தத்தை அறிவித்தனர். சண்டைநிறுத்தம் ஒரு மாதகாலம் வரை அதாவது ஜனவரி 24 ம் தேதி வரை இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
புலிகளின் சண்டைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை அரசு நிராகரித்து விட்டது. தொடர்ந்துஇலங்கை ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் செய்தித்தொடர்பாளர் ஆண்டன் பாலசிங்கம் வெள்ளிக்கிழமைவெளியிட்டுள்ள அறிக்கை:
புலிகளின் சண்டைநிறுத்தத்தை மதிக்காவிட்டால் முழு அளவில் தாக்குதலைத் தொடுப்போம். ராணுவ வீரர்களைகட்டுக்குள் கொண்டு வந்துதான் அமைதிப் பேச்சுவார்த்தை பற்றி ஆலோசிப்போம்.
எங்களது நிலை குறித்து நார்வே நாட்டுத் தூதர், இலங்கை அமைச்சர் கதிர்காமரிடம் தெளிவாகக் கூறி விட்டோம்.இலங்கை அரசுக்கு நாங்கள் போதுமான கால அவகாசம் கொடுத்து இருக்கிறோம். இதற்கு மேலும் வளைந்துகொடுக்க மாட்டோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆண்டன் பாலசிங்கம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications