சோவைச் சந்தித்தார் ஜெ.
சென்னை:
சென்னையில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா, துக்ளக் ஆசிரியரும், எம்.பி.யுமான சோ.ராமசாமி வீட்டிற்கு சென்று அவருடன் ஒன்றரை மணி நேரம்பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமீபத்தில் ஜெயலலிதா துக்ளக் அலுவலகத்துக்குச் சென்று சோவை சந்தித்துப் பேசினார். வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன், அ.தி.மு.க.கூட்டணிவைத்துக் கொள்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தத்தான் இருவரும் சந்தித்துப் பேசினார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் இதை இருவரும் மறுத்தனர். நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்கள். அதனால்தான் நாங்கள் சந்தித்துப் பேசினோம் என்று அவர்கள் கூறினார்கள்.
மீண்டும் சந்திப்பு:
இதற்கிடையே சோ வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஜெயலலிதா சென்றார். மாலை 6.30 மணி வரை அவர்கள் இருவரும்பேசினார்கள்.
ஜெயலலிதாவும், சோனியாவின் பிரதிநிதியாக வரும் பிரணாப் முகர்ஜியும் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த சூழ்நிலையில்ஜெயலலிதாவும், சோவும் சந்தித்துப் பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து சோ கூறுகையில், நானும், ஜெயலலிதாவும் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடத்தவில்லை. என்னுடைய மகளும்,பேத்தியும் ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களையும், எங்களையும் பார்த்து சாதாரணமாக குடும்பநலம் குறித்து விசாரித்து விட்டுப்போவதற்காகத்தான் ஜெயலலிதா வந்தார்.
மாலை 5 மணிக்கு வந்த ஜெயலலிதா 6.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றார் என்றார் சோ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications