இந்தியா, பாக். ரயில் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ரயில் போக்குவரத்து அடுத்த 3 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதாரி நகருக்கும், பாகிஸ்தானில் வாகா பகுதிக்கும் இடையே இருந்து வரும் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அடுத்த 3 வருடங்களுக்குநீட்டிப்பது என இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர் அதிகாரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இரு தரப்பு ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து நாட்கள் சந்தித்துப் பேசிய பிறகு அவர்கள் இந்த ரயில் போக்குவரத்தை நீட்டிப்பது என முடிவு செய்தனர்.

இந்திய ரயில்வே போக்குவரத்து அதிகாரி எஸ்.எஸ்.பண்டாரி மற்றும் பாகிஸ்தான் ரயில்வே பொது மேலாளர் அப்துல் கயாம் ஆகியோர் இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே சம்ஜதா எக்ஸ்பிரஸ் வாரம் இரண்டு முறை இருந்து வருகிறது. அமிர்தசரஸ் வரை ரயில்போக்குவரத்து நீட்டிக்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய நிராகரித்து விட்டது.

இந்தியா தரப்பில் கூறுகையில், அமிர்தரஸ் வரை ரயில் போக்குவரத்தை நீடித்தால் அதை பாகிஸ்தான் மக்கள் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆயுதங்கள்,வெடிமருந்துகள், மற்றும் கள்ள நோட்டுக்களை அந்த ரயில் மூலம் கடத்தி வருகிறார்கள். இதைத் தடுப்பதற்காகவே அமிர்தசரஸ் வரை ரயில்போக்குவரத்துக்கு இந்தியா அனுமதிக்காது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே 1976 ம் ஆண்டு முதல் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இருந்து வருகிறது. அது தொடர்பான ஒப்பந்தம் 1990ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 1994 ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் 1997 ம் ஆண்டுடன் முடிந்தது. அதே ஆண்டு இந்த ஒப்பந்தம்புதுப்பிக்கப்பட்டது. 2001 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+