ரஷ்யா செல்கிறார் லட்சுமண் கதிர்காமர்
மாஸ்கோ:
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நான்கு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை ரஷ்யா செல்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் ரஷ்யா வருவது இதுவே முதல்முறை. 1982 ம் ஆண்டுதான் கடைசியாகஇலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
இதுகுறித்து மாஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கை:
அமைச்சர் கதிர்காமர் தனது சுற்றுப்பயணத்தின் போது, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இகோர் இவானோவை சந்தித்துப் பேசுவார். இரு நாட்டினரும்ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் இலங்கையில் உள்ள தற்போதைய நிலை ஆகியவை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பேசுவார்கள்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா.சபையின் 55 வது கூட்டத்தில் ரஷ்யா மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும், இரு நாடுகளும் இணைந்துசெயல்படும் வகையிலும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர், ரஷ்ய வர்த்தக அமைச்சரை சந்தித்துப் பேசுவார்.
இலங்கை, தேயிலை, காபி, உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும் ரஷ்யாவிலிருந்து உரவகைகள், ரசாயனப் பொருட்கள், இரும்பு எஃகுப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை உபகரணங்களை இறக்குமதி செய்து கொள்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications