நதியை மாசுபடுத்திய நிறுவனம் மீது நடவடிக்கை
சென்னை:
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பவானி ஆற்றை அசுத்தப்படுத்தி வரும் தென்னிந்திய விஸ்கோஸ் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கப்படும் என்று சட்டசபையில் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தமிழ் மாநில காங்கிரஸ் துணை சபைத்தலைவர் லட்சுமணன், பவானி ஆறு விஸ்கோஸ்தொழிற்சாலையால் அசுத்தப்படப்பட்டு வருவதையும், அதைத் தடுத்து நிறுத்தும் படியும் கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் பழனிவேல்ராஜன், கூறுகையில், லட்சுமணன் கூறியது சரியே. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.
முன்னதாக, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், லட்சுமணன் கூறியது போல் பவானி ஆறு அசுத்தப்பட்டுக்கிடக்கிறது. தென்னிந்திய விஸ்கோஸ் தொழிற்சாலைக் கழிவுகள் இந்த பவானி ஆற்றில் கலக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்த அரசு உரியநடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே இந்தத் தொழிற்சாலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மீறியது தொடர்பாக ரூ 10 லட்சம் அபராதம் கட்டியது.சில நாட்கள் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. பின்னர் அந்த நிறுவனத்தை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றார்.
ஆனால் த.மா.கா. உறுப்பினர்கள் அமைச்சரின் இந்த பதிலால் திருப்தியடையவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,தென்னிந்திய விஸ்கோஸ் தொழிற்சாலைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications