மனிதம் இங்கு மரத்துப் போய் விட்டது ...

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

எய்ட்ஸ் நோயால் இறந்த இளம் பெண்ணின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர்.இதனால் அந்தப் பெண்ணின் உடல் அநாதையாக மருத்துவமனையில் கிடக்கிறது.

சுஜாதா, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுஜாதாவுக்குத் திருமணமாகி, 2 குழந்தைகள் உண்டு. அவரதுகணவர், சில வருட தாம்பத்தியத்திற்குப் பிறகு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனித்து விடப்பட்ட, சுஜாதா,விபச்சாரத்தில் ஈடுபட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு போலி ரூபாய் நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். முதலில் கொல்லம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து, திருவனந்தபுரம் அருகேயுள்ள பூஜாபுரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்குசிகிச்சை தரப்பட்டது.

ஆனால், நாளாக, நாளாக அவரது உடல் நிலை மோசமடைந்து வந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிசம்பர் 23-ம் தேதி சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கு, எய்ட்ஸ் நோயைஉண்டாக்கும், எச்.ஐ.வி வைரஸ் இருப்பது தெரிய வந்தது.

எய்ஸ்ட் நோயின் வலிமையால், சுஜாதாவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்தவெள்ளிக்கிழமை அவர் மரணமடைந்தார். சுஜாதா இறந்த தகவல் அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அவர்கள் யாருமே அதிர்ச்சியோ, வேதனையோ அடையவில்லை. மாறாக அலட்சியமே காட்டின்.

மேலும், உடலைப் பெற்றுக் கொள்ளவும் மறுத்து விட்டனர். இதனால் சுஜாதாவின் உடல் மருத்துவமனையிலேயேஅநாதையாகக் கிடக்கிறது. தற்போது சுஜாதாவின் உடலை எரிக்கும் பொறுப்பு அரசிடம் வந்துள்ளது.வியாழக்கிழமை சுஜாதாவின் உடல் எரியூட்டப்படும் என்று தெரிகிறது.

சுஜாதாவின் இப்போதைய நிலையை பார்த்தால், அவர்களை விட மரணமே பெரிது என்று எண்ணத் தோன்றுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+