சண்டைநிறுத்த நீட்டிப்பை வரவேற்கிறார் பா.ஜ.க தலைவர்
பாண்டிச்சேரி:
சண்டைநிறுத்தம் நீட்டித்திருப்பது காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் வகையிலும்,அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் எடுக்கப்பட்ட தைரியமான முயற்சி என்று பாரதிய ஜனதா கட்சி அகிலஇந்தியத் தலைவர் பங்காரு லட்சுமண் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
காஷ்மீரில் பல்லாண்டு காலமாக தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.இந்தியா காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முழு முயற்சியையும் எடுக்க வேண்டும்.
உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு காண முயற்சி எடுக்கவேண்டும். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதியை நிலைநாட்டு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு ரம்ஜான் தினத்தன்று சண்டைநிறுத்த அறிவிப்பைவெளியிட்டது. அதற்குப்பின் அது குடியரசு தினம் வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோரிடம்நடத்திய ஆலோசனைக்குப்பின் சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிப்பது என முடிவெடுத்துள்ளதுமத்திய அரசு. இது மத்திய அரசின் தைரியமான முயற்சியாகும்.
சண்டைநிறுத்த நீட்டிப்பைப் புரிந்து கொண்டு தீவிரவாதிகள் தீவிரவாதத்தைக் குறைத்துக் கொண்டுபேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார் பங்காரு லட்சுமணன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications