பா.ஜ.க மூத்த தலைவர் விஜயராஜே மரணம்
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரும், பா.ஜ.க.மூத்த தலைவருமான விஜயராஜே சிந்தியா வியாழக்கிழமை காலை அப்பல்லோமருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 82. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜனவரி 2 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மூன்று நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை அதிகாலைமரணமடைந்தார்.
விஜயராஜேவுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் வசுந்தரா ராஜே சிந்தியா சிறுதொழில் வளர்ச்சித்துறை அமைச்சர். நாடாளுமன்றஎதிர்க்கட்சி துணைத் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா இவரது மகன். இவரது மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும்பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா












Click it and Unblock the Notifications