தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை வராது
சென்னை:
தமிழ்நாட்டில் வரவிருக்கும் 3 ஆண்டுகளுக்கு மின்சார பற்றாக்குறை இருக்காது என தமிழக மின்சாரத்துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் வியாழக்கிழமை தி.மு.க. எம்.எல்.ஏ., செங்கை சிவம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மணிமற்றும் த.மா.கா. எம்.எல்.ஏ. அப்பாவு, ஞானசேகரன் ஆகியோர் மின்சாரம் தொடர்பான கேள்விகள் கேட்டனர்.இதற்கு பதிலளிக்கையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்கள் மூலமாக 350 மெகாவாட்மின்உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் அமைப்பது குறித்து அவர்களுடன் பேச்சு வார்த்தைநடத்திவருகிறோம்.
அவர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ 4 கேட்கிறார்கள். ரூ 3-க்கு மேல் கொடுத்தால் மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படும்.தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தேவை.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 6 ஆயிரத்து 400 மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எனவே மற்றமாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் குறைவான மின் அழுத்தம் இருக்காது.காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதை தமிழக அரசு ஊக்குவிக்கிறது.
காற்றாலை மூலமாகவோ, தனியார் மூலமாகவோ உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மூன்றாவது நபருக்குவிற்பனை செய்யக்கூடாது என அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது என கூறினார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications