சென்னையில் நிலநடுக்கம் ... உயிர்ச்சேதம் இல்லை
சென்னை:
இந்தியாவின் குடியரசு தினமான வெள்ளிக்கிழமை சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தமிழகம், ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை, காலை 8-50 மணியளவில் , ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். வீடுகளில்வைக்கப்பட்டிருந்த பொருட்கள் இடம்பெயர்ந்து கீழே விழுந்தன.
சென்னையில், தியாகராய நகர், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், நெற்குன்றம், முகப்பேறு போன்ற இடங்களில் நிலநடுக்கம்உணரப்பட்டது. மேலும், தஞ்சாவூர், கடலூர், மற்றும் தென் ஆற்காடு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது, பாண்டிச்சேரியில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்ற இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேற முயற்சித்ததால்,நிகழ்ச்சி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நிலநடுக்கம், 3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மச்சிலிப்பட்டினத்திலும், மக்கள் நிலநடுக்கத்தால்பாதிக்கப்பட்டனர். இந்த மூன்று மாநிலங்களிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து விவரங்கள் எதுவும்இதுவரை கிடைக்கவில்லை.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications