சென்னை வந்தார் ராஜ்குமார்
சென்னை:
வீரப்பனால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் மருத்துவ சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை சென்னை வந்தார்.
சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை மாலை, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
ஜூலை 30 ம் தேதி நடிகர் ராஜ்குமார் (76), வீரப்பனால் கடத்தப்பட்டார். அதற்குப் பின் பெரும் சிரமங்களுக்கிடையில் அவர் மீட்கப்பட்டார்.
பெங்களூர்திரும்பிய ராஜ்குமார், தன்னை மீட்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதிஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் தனக்கு மருத்துவசிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்துள்ளார். அவருடன் அவரது மகன் ராகவேந்திர ராஜ்குமார்,கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரும் வந்துள்ளனர்.
ராஜ்குமார் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நான் மருத்துவசிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்துள்ளேன். நான் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசலாம் என்றுநினைத்திருக்கிறேன்.
வீரப்பன் என்னை காட்டில் எப்படிப் பார்த்துக் கொண்டார் என்று அனைவரும் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் வீரப்பன் நல்லவர்.நேர்மையானவர். ஏதோ ஒரு கசப்பினால் குற்றவாளியாகிவிட்டார். காட்டில் அவர் என்னை மிகவும் உபசரித்தார்.
வீரப்பனுடன் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தீவிரவாதிகளா, விடுதலைப்புலிகளா என்று எனக்கு எதுவும் தெரியாது. நான் விடுவிக்கப்பட்டதேதி குறித்து பலர் குழப்பிக் கொள்கிறார்கள். உண்மையைச் சொன்னால் நான் நவம்பர் 14 ம் தேதி விடுவிக்கப்பட்டேன் என்றார் ராஜ்குமார்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications