கீழ் கோர்ட்டுகள் 6 நாட்கள் இயங்குமா?
சென்னை:
கீழ் கோர்ட்டுகள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்ற உத்தரவை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைத்திருப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
தேங்கிக் கிடக்கும் பல வழக்குகளையும் குறைக்கும் விதமாக 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் எனமுடிவெடுக்கப்பட்டது. இதற்காக சனக்கிழமைகளில் கீழ் கோர்ட்டுகள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இதன் பின்பு சனிககிழமைகளில் கிழ்கோர்ட்டுகள் இயங்குவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 4 வாரங்களுக்குநிறுத்தி வைக்கப்படுவதாக தலைமை நீதிபதி ஜெயின் கூறினார். ஆயினும் தமிழகத்தின் பல மாவட்டங்களில்வக்கீல்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயினை பல்வேறு வக்கீல்கள் சங்கத்தினர் சந்தித்து தங்கள்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மறு உத்தரவு வரும்வரை சனக்கிழமைகளில் கீழ் கோர்டு இயங்குவதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஜெயராமன்தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 29-ம் தேதி முதல் வக்கீல்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications