குஜராத்துக்கு உதவுகிறது தமிழக காங்கிரஸ்
சென்னை:
குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி நிவாரணப் பொருட்கள் அனுப்புகிறது எனதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளிலும வெள்ளிக்கிழமையன்று பூகம்பம் ஏற்பட்டது. இதில் குஜராத் மாநிலம் கடுமையாகபாதிக்கப்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு மருந்து பொருட்கள், உணவு, உடை மற்றும்நிதி உதவி உள்ளிட்ட பல நிவாரண உதவிகளை தமிழக காங்கிரஸ் அனுப்ப இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிதி உதவி, மருந்து மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை மக்களிடமிருந்து பெற்றுவருகிறோம்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 150 தொண்டர்கள் எந்த நேரத்திலும் குஜராத் செல்ல தயாராக இருக்கிறார்கள்.அவர்கள் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். தேவைபட்டால் காங்கிரஸ் கட்சிமருத்துவர்களையும் குஜராத்திற்கு அனுப்ப தயாராக இருக்கிறது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications