உலகின் உதவி குவிகிறது
வாஷிங்டன்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் நிவாரண நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன.
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள பூஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்கள் உருத்தெரியாமல் சிதைந்துவிட்டன.
மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகள் உதவி அளிக்க முன்வந்துள்ளன. அமெரிக்கா, 4.5 கோடி ரூபாய் மதிப்புக்கு பிளாஸ்டிக் ஷீட்டுகள், போர்வைகள்,தண்ணீர்தொட்டிகள், தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை அளித்துள்ளன.
ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு, குஜராத் மக்களுக்காக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, 2.5 கோடி ரூபாய்க்கு போர்வைகள், மருந்துப்பொருட்கள் மற்றும் துணிமணிகளை அனுப்பி வைத்துள்ளார்.
ஜப்பான் 4 கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது. பெல்ஜியம் நாடு நிவாரணப் பணிகளுக்காக 4 கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது. அயர்லாந்து ரூ 5 கோடி உதவிஅளித்துள்ளது.
ஓமன் நாடு நிவாரணப் பணிக்காக 1.5 டன் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளன. முதல் கட்டமாகஅனுப்பப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் அகமதாபாத் சென்றடைந்துள்ளன.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போர்வைகளை அனுப்பி வைத்துள்ளது. கொரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.நியுசிலாந்து நாடு 2, 20,000 டாலர்கள் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
கேரளா உதவி:
பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு, கேரளா ரூ 1 கோடி வழங்கும் என்று மாநில முதல்வர் ஈ.கே.நாயனார் அறிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications