பஸ் எரிப்பு .. 2 அ..தி.மு.க.வினருக்கு ஜாமீன்
சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மேலும் இரண்டுஅ.தி.மு.க.வினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு தனிநீதிமன்றம் 1999-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் கலவரம் வெடித்தது. தர்மபுரியில்வேளாண்மை கல்லூரி பேருந்து ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 3 பெண்கள்உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.
இந்த சம்பவத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில்பலர் சென்னை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன்அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அ.தி.மு.க. மாணவர் அணி தலைவர் வீரமணி மற்றும் உதயகுமார்ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. உதயகுமார் சென்ற ஆண்டுசெப்டம்பர் மாதம் கைது செய்ப்பட்டார். வீரமணி சென்ற மாதம் 9- ம் தேதி சரணடைந்தார்.
இவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்ட்டது.தங்கள் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை, குற்றப்பத்திரிக்கையில்தான் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.நாங்கள் சாட்சிகளை குலைக்க மாட்டோம். எங்களுக்கும் ஜாமீன் தேவை என அந்தமனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகர் இவர்கள் இருவரையும் ரூ 25 ஆயிரம் தனி நபர்ஜாமீனிலும், அதே தொக்ைகு ஈடான இரு நபர் ஜாமீனிலும் விட உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications