பா.ஜ.க. 25 கோடி தருகிறது
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச், சூரத், பூஜ் மற்றும் அகமதாபாத் பகுதிகளில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 25 கோடி வழங்கவுள்ளதாகபாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சித் துணைத்தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் வரலாற்றைப் புரட்டிப்போட்ட சம்பவமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிடமிருந்து நிதி மற்றும் நிவாரண உதவிகள் வந்தவண்ணம்உள்ளன.
பாரதிய ஜனதா கட்சி ரூ 25 நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரிவினரிடமும் நிவாரண உதவிகளைச் செய்யுமாறுகேட்டுக் கொண்டுள்ளோம்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணிமணிகள்தான் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. மேலும் முக்கியத் தேவையானஉணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பழங்கள், பிஸ்கெட்டுகள், பற்பசை, மெழுகுவர்த்தி ஆகியவற்றை வழங்குமாறு பாரதிய ஜனதாக்கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஜ் பகுதியில் இன்னமும் மின்சாரம் சரிசெய்யப்படவில்லை. அதனால் மெழுகுவர்த்திகள், டார்ச் லைட்டுக்கள் ஆகியவை அதிக அளவில் தேவைப்படும்.நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மாநில அரசிடம் கடன் பெற்று வீடுகட்டியவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
நிவாரணப்பணிகளைப் பார்வையிடுவதற்காக மூத்த தலைவர் ஜே.பி.மாத்தூர் தலைமையில் மத்திய ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஜனாகிருஷ்ணமூர்த்தி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications