மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை .. அமைச்சர்
கோவை:
தேசிய பசுமைப் பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்றும் மாணவர்கள், தேர்வில் தோல்வியுறும் நிலைஏற்பட்டால் அவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என கோவையில் மத்திய சுற்றுச் சூழல்மற்றும் வனத்துறை அமைச்சர் பாலு தெரிவித்தார்.
கோவையில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 27மாநிலங்களைச் சேர்ந்த 145 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
20 மாநில வனத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் தேசிய பசுமை பாதுகாப்பு படை தொடங்குவது பற்றிமுக்கியமாக விவாதிக்கப்பட்டது. இது குறித்து எல்லா மாநில அமைச்சர்களும் தங்களின் வரவேற்பைதெரிவித்தனர்.
மாநாட்டின் நிறைவு நாளான திங்கள்கிழமை மத்திய அமைச்சர் பாலு பேசுகையில்,
தேசியப் பசுமை பாதுகாப்பு படையில் கல்லூரி மற்றும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொருமாவட்டத்திலும் 100 பசுமைப் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.
நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் படைகள் தொடங்கப்பட்டு சுற்றுச் சூழலின் அவசியத்தையும் அதனை எவ்வாறுபாதுகாப்பது என்பது பற்றியும் அறிவுறுத்தப்படும். இதில் சேரும் மாணவர்களின் பாடத்தில் ஏதேனும் ஒருபாடத்தில் மதிப்பெண் குறைவாக இருந்தால், மாணவர் தேர்ச்சி பெறத் தவறும் பட்சத்தில் இருப்பின் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் துறையும், மனித வள மேம்பாட்டுத் துறையும் இணைந்து இந்த தேசிய பசுமைபாதுகாப்பு படையின்பணிகளை மேற்கொள்வர். நாட்டின் பல அணைகளை உயர்த்தப் படுவதற்கான திட்டம் பற்றியும், பூகம்பத்தால்அணைகள் பாதிக்கப்படுமா என்பது பற்றியும் விவாதிக்கப்படவில்லை.
கங்கை நிதியைத் தூய்மைப்படுத்துவது குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது என்றாலும், கங்கை முமுழுதும்தூய்மையாக்க போதிய நிதி இல்லாததால், அந்தப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில்உள்ள தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது பற்றி அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தகுந்தஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறை சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. கோவை மாவட்டம் சிறுமுகை விஸ்கோஸ்ஆலையால் அந்தப் பகுதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுஎன்று பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications