தாலி இறங்கியதா? .. திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியில் அருள்மிகு பத்மாவதி தாயாரின் திருமாங்கல்யம் கழன்று விழுந்ததாக கூறப்படுவது வெறும் வதந்திஎன திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருச்சானூரில் உள்ள அருள்மிகு பத்மாவதி தாயாரின் திருமாங்கல்யம் கழன்று விழுந்ததால், பூகம்பம் ஏற்பட்டதாகதிடீரென திங்கள்கிழமை செய்தி பரவியது.
இதையடுத்து தமிழக, ஆந்திராவில் உள்ள பல பெண்கள் தங்கலின் தாலியை மாற்றிக் கொண்டனர். தாலி இறங்கியசெய்தியை மறுத்த தேவஸ்தான அதிகாரி ரங்கநாத சாரி, இது வெறும் வதந்தி இதனை நம்ப வேண்டாம் எனமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications