அடுத்து டெல்லி?
டெல்லி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து டெல்லியிலும் பூகம்பம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுவதால் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெருமளவில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இடிபாடுகளில்இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
குஜராத்தில் ஏற்பட்டது போல் டெல்லியிலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக பூகம்ப ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த 40ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் இருக்கும் என்றுகூறப்படது.
டெல்லி நகரில் மிக உயரமான கட்டிடங்கள் 100 க்கும் அதிகமாக உள்ளது. யமுனை நதிக்கரைப் பகுதியில் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புக்கள்உள்ளன. இங்குள்ள தரைப்பகுதி மிகவும் மிருதுவானதாக இருப்பதால் பூகம்பப் பாதிப்பு அதிக அளவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்துபொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி தவிர தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் வாஜ்பாய் மூத்த அமைச்சர்களுடன் நிலநடுக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார். குஜராத்தில் பூகம்பப்பாதிப்பு அளவுக்கதிகமாகஇருப்பதால் நிதி உதவி மற்றும் உதவி பொருட்களை உடனடியாக வழங்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும், குஜராத் நிலவரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இடிபாடுகளுக்கிடையேஇன்னும் 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்றும், சாவு எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைக்கும் அளவுக்குஅதிகரிக்கலாம் என்றும் அச்சப்படுவதாக அதிகாரிகள், அத்வானியிடம் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications