மனைவி, 4 குழந்தைகளைக் கொன்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மனைவி வேறொரு நபருடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகப்பட்டுமனைவியையும்,4 குழந்தைகளையும் தூங்கிக் கொண்டிருக்கும் போது அம்மிக்கல்லால் நசுக்கிக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் ராஜகோபால் (43). சிங்கப்பூரில் தச்சு வேலை செய்துவருகிறார். 6 மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார்.

ராஜகோபாலின் மனைவி திலகவதி (43). இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகளும்உள்ளன. திலகவதி சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு பின்திலகவதி தன் குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்துவந்தார்.

இந்த முறை வீட்டுக்கு வந்த ராஜகோபால் தன் மனைவி வேறொருவருடன் தொடர்புகொண்டிருப்பதாக சந்தேகம் கொண்டு கோபம் கொண்டார்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் மனைவி, குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்களைக் கொல்ல முடிவு செய்தார். வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து முதலில் மனைவியைக் கொன்றார். தொடர்ந்து, பெண் குழந்தைகளானஅம்சவல்லி (13), தீபா (10), பாக்யலட்சுமி (8) ஆகியோரையும் கொன்றார்.

அம்மாவையும், அக்காக்களையும் தந்தை கொன்றதைப் பார்த்த 4 வயது மகன்வாசுமணி, தன்னைக் கொன்று விடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளான். ஆனால் சிறுவன்என்பதையும் பாராது, இரக்கம் கொள்ளாமல் அந்த சிறு பாலகனையும் கொன்றார்ராஜகோபால்.

ஐந்து பேரையும் கொன்ற பின்னர் ராஜகோபால் அங்கிருந்து தப்பினார். தகவல் அறிந்துவந்த போலீஸார் தீவிரமாகத் தேடி ராஜகோபாலைக் கைது செய்தனர்.

ராஜகோபாலிடம் விசாரணை செய்த போது, குழந்தைகள்அனாதைகளாகிவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களையும் கொன்றுவிட்டதாககூறினார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+