கொலம்பிய விமானம் கடத்தப்பட்டு மீட்பு
கொலம்பியா:
நடுவானில் கடத்தப்பட்ட கொலம்பிய விமானம், விமான பைலட் மற்றும் பயணி ஒருவரின் முயற்சியால் மீட்கப்பட்டது.
கொலம்பியாவின் ஒரு பகுதி அந்நாட்டுத் தீவிரவாத இயக்கமான கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படையின் வசம் உள்ளது. கொலம்பியாவிலுள்ள சான்விசன்ட் விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனமான சதேனாவின் விமானத்தை தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக்கருதப்படும் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தினார்.
விமானத்தை தலைநகர் பொகோட்டாவிற்கு கடத்திய அவரை பயணி ஒருவரின் உதவியுடன் பைலட் மடக்கிப் பிடித்தார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாககொலம்பிய ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 32 பேர் பத்திரமாகமீட்கப்பட்டனர்.
கொலம்பிய அரசுக்கும், கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படைக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் நவம்பரில் தோல்வி அடைந்தது.இதையடுத்து தீவிரவாதிகள் வசம் அளிக்கப்பட்ட பகுதி பற்றி கொலம்பிய அதிபர் முடிவெடுப்பதற்கு 48 மணி நேரங்களுக்கு முன் இத்தகைய சம்பவம்நடைபெற்றுள்ளது. இது அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் முயற்சி என ராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications