பட்ஜெட்டை கிழித்தெறிந்தார் அதிமுக எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையில், வியாழக்கிழமை நடந்த கூட்டத்தின்போது, இடைக்கால பட்ஜெட்டின் நகலை, சட்டசபைஅதிமுக தலைவர் பி.ஆர்.சுந்தரம் கிழித்து, குப்பையில் எறிந்தார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் சபையில் நடந்து வருகிறது.புதன்கிழமை நடந்த கூட்டத்தின்போது, ஒத்திவைப்பு மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்திற்குசபாநாயகர் அனுமதி தரவில்லை என்று கூறி சுந்தரம் தலைமையில், அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடந்த கூட்டத்திலும் அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர்.இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சுந்தரம் பேசினார். அவர் பேசுகையில், 1996-ம்ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதுமுதல் இப்போது வரை அவர்களின் ஒரே அம்சக் கொள்கை,அதிமுகவையும், அதன் தலைவர் ஜெயலலிதாவையும் அழிப்பதே.

முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஒன்றுமேயில்லை என்று கூறிக் கொண்டே ஆவேசத்துடன்பட்ஜெட் நகலை கிழித்து, குப்பைத் தொட்டியில் போட்டார். இதில் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

இதைப் பார்த்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆவேசத்துடன், சுந்தரத்தைப் பார்த்து கோஷமிட்டனர். ஆனால்முன்வரிசையில் அமர்ந்திருந்த அவை முன்னவர் அன்பழகன் உள்பட பல மூத்த அமைச்சர்கள் அமைதியாகஅமர்ந்திருந்தனர். சம்பவம் நடந்தபோது, முதல்வர் அவையில் இல்லை.

சுந்தரத்தின் செயலால் கோபமடைந்த துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி (சபாநாயகருக்குப் பதில் அவர்தான்சபையை நடத்திக் கொண்டிருந்தார்), ஆவேசமாக சுந்தரத்தைப் பார்த்து, இந்த சட்டசபையின் கடைசிக் கூட்டம்என்பதால் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுகிறேன் என்று கூறினார்.

முன்னதாக தொடர்ந்து சுந்தரம் பேசுகையில், ஜெயலலிதா வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடக் கூடாதுஎன்பதற்காக அவர் மீது பொய்யான வழக்குகளைப் போட்டுள்ளது திமுக அரசு. ஆனால் திமுகவினரின் எண்ணம்பலிக்காது.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவார். ஆட்சியைப் பிடிப்பார். நிச்சயம் முதல்வர் பதவியில் அமர்வார்.இன்றிலிருந்து சரியாக 100 நாட்கள்தான். திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படும். அதற்குப் பிறகு அதிமுக ஆட்சிஅமைக்கும்.

கருணாநிதி மீது வழக்குகள் பதிவு செய்து, அவர் செய்த ஊழலை வெட்டவெளிச்சமாக்குவோம்.

கருணாநிதிக்காக மத்திய சிறைச்சாலையின் கதவுகள் திறந்தே இருக்கிறது. தொல்காப்பியத்தை எழுத வேண்டும்என்ற கருணாநிதியின் ஆசையை, சிறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள ஜெயலலிதா நிச்சயம் உதவுவார். (இந்தசமயத்தில், திமுக உறுப்பினர்கள் ஆவேசத்துடன் சில கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்களை சபைத் தலைவர்அமைதிப்படுத்தினார்)

அந்த சமயத்தில் குறுக்கிட்ட போக்குவரத்து அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா மீது பொய்யான வழக்குகள்போடவில்லை. சில வழக்குகளில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மீண்டும் சுந்தரம் குறுக்கிட்டு, ஐந்து ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு எந்த நன்மையையும்மக்களுக்குச் செய்யவில்லை. தேர்தலின்போது மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ள ஆட்சியை நீக்கி விட்டு ஆளுநர்ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் கில் கூறியுள்ளார். அதன்படி திமுக அரசுநீக்கப்பட வேண்டும்.

அப்போது குறுக்கிட்ட சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் பரிதி இளம் வழுதி, அதே தேர்தல்கமிஷனர்தான், கிரிமினல்கள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்றதும்,ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தரப்பில் பலத்த கரவொலி எழுந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+