கைதாவாரா கர்நாடக அமைச்சர்?
பெங்களூர்:
முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜானை கைது செய்யக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர்நடத்திய போராட்டத்தின் விளைவாக ஜான் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கடவுள்கொடுத்த தண்டனை என கர்நாடக அமைச்சர் ஜான் கூறியிருந்தார். இந்த கருத்துக்குபலத்த எதிர்ப்பு எழுந்ததால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜான் பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும் அவரை கைது செய்ய வேண்டும்.அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனகோரி பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் மகாத்மா காந்தி ரோட்டில் மாநில தலைவர் பசவராஜ் தலைமையில் தர்ணாபோராட்டம் நடந்தது. இதுகுறித்து முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாகூறியதாவது:
ஜானுக்கு எதிரான தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தலைவருக்கு கொலைமிரட்டல் இருப்பதால் ஜான் கைது செய்யப்பட வேண்டும்.
ஜான் பதவி விலகல் குறித்து முன்னாள் போலீஸ் துறை அதிகாரி கொலாசோ கூறியுள்ளகருத்து கண்டிக்கத்தக்கது என கூறினார்.
மந்திரி ஜானை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு கப்பன்பார்க் காவல்நிலையத்தில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ஆனாலும் போலீசார் அவர் மீதுவழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
ஜான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி பா.ஜ.க.எம்.எல்.ஏ.க்கள்கூட்டாக கப்பன் பார்க் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா செய்தனர்.
பா.ஜ.க. தலைவர்கள் கர்நாடக டி.ஜி.பி. தினகரைச் சந்தித்து புகார் கொடுத்தனர். அதன்பின் ஜான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். ஜான் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications