ஜோதிடர் ஏற்படுத்திய பீதி
அகமதாபாத்:
குஜராத்தில் பிப்ரவரி மாதம் மீண்டும் பூகம்பம் ஏற்படும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது, குஜராத் மக்களிடையே பெரும்பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில மக்கள் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த நேரத்தில் காந்திநகரைச் சேர்ந்தஅம்பாலால் பாடீல் என்ற ஜோதிடர், குஜராத் மக்களிடையே மீண்டும் பூகம்ப பீதியை ஏற்படுத்தி விட்டார்.
அகமதாபாத் நகரில் வாழும் 40 லட்சம் மக்கள் அம்பாலால் கூறிய ஜோதிடத்தால் மிகவும் பீதியடைந்துள்ளனர். அவர் தனது ஜோதிடத்தில் கிரங்களைஅடிப்படையாக வைத்துக் கணக்கிட்டதில் பிப்ரவரி 3 ம் தேதி முதல் பிப்ரவரி 15 ம் தேதிக்குள் குஜராத்தை மீண்டும் பூகம்பம் தாக்கும் அபாயம் உள்ளதுஎன்று கூறியுள்ளார்.
அகமதாபாத் நகரில் வசிக்கும் மக்கள் அம்பாலால் கூறியதை மிகவும் நம்புகின்றனர். ஏனெனில் ஏற்கனவே ஜனவரி 18 ம் தேதி இவர் வெளியிட்டஜோதிடம் குறித்த தகவலில் ஜனவரி 25 ம் தேதிக்குப்பின் குஜராத்தில் மிகப்பெரிய இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்று கூறியிருந்தது நடந்துவிட்டதால் மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது.
இந்த முறை, அகமதாபாத், மவுன்ட் அபு மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மேவார் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களையும் பூகம்பம்தாக்கும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார் அம்பாலால். இதனால் ஜமால்பூரில் வசிக்கும் வியாபாரிகள் தங்கள் கடைகளை பிப்ரவரி 3 ம் தேதிதிறக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications