"கடவுளின் தண்டனை அல்ல
டெல்லி:
குஜராத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு, கடவுளால் அளிக்கப்பட்ட தண்டனைதான் பூகம்பம் என்று கர்நாடக அமைச்சர் ஜான் கூறியதைகிறிஸ்தவ மதத் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
கர்நாடக சிவில் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஜான், பெங்களூரில் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குஜராத் மக்களை பூகம்பம் மூலம்கடவுள் தண்டித்து விட்டார் என்று கூறியிருந்தார். இதையடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் புதன்கிழமை தனது பதவியை ஜான் ராஜினாமாசெய்தார்.
இதற்கிடையே இந்தியா கத்தோலிக்க அமைப்பின் துணைத் தலைவரும், டெல்லி ஆர்ச் பிஷப்புமான வின்சென்ட் எம் கான்ஸெஸா வெளியிட்டுள்ளஅறிக்கையில், கடவுள் மிகவும் கருணைமிக்கவர். அவர் நம்மை அன்பு செய்பவர். அவர், நாம் செய்த தவறுகளை மறக்கவும், மன்னிக்கவும் செய்வார்.அவர் ஒரு போதும் தவறு செய்த மக்களைப் பழிவாங்கவோ, தண்டிக்கவோ மாட்டார்.
தான் கூறிய கருத்துக்கள் தவறு என்று ஜான் உணர்ந்ததை பாராட்டுகிறோம். அதே சமயம் அவர், தனது தவறுக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுராஜினாமா செய்ததை வரவேற்கிறோம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆக்ரா ஆர்ச்பிஷப் ஆஸ்வால்டு கிரேஸியஸ் கூறுகையில், இயேசு கிறிஸ்து கூறிய கருத்துக்களும், கிறிஸ்தவ மத போதகங்களும் நாம் அனைவரும் ஒன்று.பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதைத்தான் போதிக்கிறது. இதில் கடவுளின்சீற்றம் என்று கூறுவது மிகப்பெரிய தவறு என்றார்.
திருச்சூர் ஆர்ச் பிஷப் ஜேக்கப், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். போப் இரண்டாம் ஜான் பால், ரூ 40.6 லட்சத்தைநிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்திய கிறிஸ்தவ அமைப்புக்களில் உள்ள உறுப்பினர்கள் பலர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ் நகரை நேரில் சென்றுபார்வையிட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications