நிதி தருகிறது பெரியார் அறக்கட்டளை பள்ளி
தஞ்சாவூர்:
தந்தை பெரியார் அறக்கட்டளை பள்ளி ஊழியர்கள் மாத சம்பளத்தில் 10 சதவிகிதத்தைகுஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு அளிக்கின்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தஞ்சையில் அளித்த பேட்டியில், ஏற்கனவேகழகத்தின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிவாரணநிதியாக முன்னாள் பிரதமர்வி.பி.சிங்கிடம் அளிக்கப்பட்டது.
வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்கள்சேகரிக்கப்பட்டு குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் ரத்ததான முகாம்கள்மூலம் சேகரிக்கப்படும் ரத்தத்தை குஜராத்திற்கு விமானம் மூலம் அனுப்புவதற்குமத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
2001-2005 ஆண்டுகளுக்கான 11வது நிதிக்கமிஷனின் நிதி ஒதுக்கீடு முதல்வர்கருத்துப்படி 4711 கோடி குறைகிறது. இது தவிர, ஊக்கநிதி மூலம் கிடைக்கும்தொகையும் (402 கோடி ரூபாய்) மிகவும் குறைவாக உள்ளது. இதனை மத்திய அரசுமறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications