உலக வங்கி நிதியுதவி
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் சேர்ந்து 500 மில்லியன் டாலர்கள் அளிப்பதாகதெரிவித்துள்ளன.
குஜராத்தில் குடியரசு தினத்தன்று 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச், அகமதாபாத், சூரத், சுரேந்திரநகர் மாவட்டங்கள் கடும்சேதமடைந்தன.
கட்ச் மாவட்டத்திலுள்ள பூஜ் நகர் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் உள்ள பிறமாநிலங்கள் உள்பட வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் உலக வங்கி, 12 பேர் கொண்ட குழுவை குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்புகிறது. அவர்கள் பிப்ரவரி12 ம் தேதி குஜராத் வருவார்கள். பின்னர் பூகம்ப நிவாரணமாக எவ்வளவு உதவி தேவைப்படும் என்பது குறித்து ஆய்வு செய்து குஜராத் மாநிலமுதல்வரின் முதன்மைச் செயலாளர் லாஹிரியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
அதற்குப்பின் உலக வங்கி நிதியுதவி செய்யும். உலக வங்கியிடமிருந்து 70 சதவீத நிதியதவி கடனாக அளிக்கப்படும். 30 சதவீதம் நிதியாக அளிக்கப்படும்.
கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் வீடுகள் கட்டுவதற்காக தேசிய வீட்டு வசதி வங்கி ரூ 10 கோடியும்,எச்.யூ.டி.சி.ஓ.வங்கி ரூ 15 கோடியும் வழங்க ஒத்துக்கொண்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் எச்.யூ.டி.சி.ஓ. 15 மையங்களை அமைத்து வீடுகள்கட்டுவதற்காக நிதியுதவியைப் பெறுவதற்காக ஆலோசனைகளை வழங்கவுள்ளது.
குஜராத் முதல்வரின் முதன்மை செயலாளர் லாஹிரி கூறுகையில் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் மக்களுக்கு உடனடியாக கம்பளிகள், நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். 50,000 பேருக்கு தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பச்சாவ் மற்றும் அஞ்சார்பகுதிகளில் ஒரு வீடு கூட மீண்டும் சரிபார்த்து வாழ்வதற்கேற்ற வகையில் இல்லை என்றார்.
முன்னதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவிக்கையில், முதலில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடுகள் ஏற்பாடு செய்துகொடுப்பது, அவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத்மாநிலம் முழுவதும் 10.6 லட்சம் சிறிய மற்றும் பெரிய கட்டிடங்கள் பூகம்பத்தால் இடிந்து விழுந்துள்ளன என்று கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications