எப்போது தேர்தல் வந்தாலும் ஓ.கேதான் ..பா.ஜ.க.
திருச்சி:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழகபாரதிய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருச்சியில் அவர், ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு62 தொகுதிகளில் நல்ல ஆதரவு உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தங்களை பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள்கவனித்து வருகிறார்கள்.
பிப்ரவரி 8 ம் தேதி பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் கூடி தேர்தல் திட்டங்கள் குறித்துவிவாதிக்கிறது. பிப்ரவரி 9 ம் தேதி பிற விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தவுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தி.மு.கஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால்அயோத்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் முதன் முதலாக சந்தோஷப்படுபவர்கருணாநிதியாகத்தான் இருப்பார்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் கடவுளின் தண்டனை என்று கர்நாடக அமைச்சர் ஜான் கூறி, அது சர்ச்சைக்குரியதாகிஅவர் ராஜினாமா செய்து விட்டார். அவரது பேட்டி குறித்து பல கிறிஸ்தவ அமைக்களே கண்டனம்தெரிவித்துள்ளன. அவர் கூறிய கருத்துக்கள் தவறுதான்.
குஜராத் பூகம்ப நிவாரணத்திற்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஷார்ஜாவில் பிப்ரவரி8 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடத்தவிருந்தன.
ஆனால் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி கூறுகையில் இந்தப் போட்டிக்குமத்திய அரசு அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளார். இது நியாயமானதுதான்.
இந்திய அணி ஷார்ஜா சென்றுதான் நிதிவசூல் செய்ய வேண்டும் என்றில்லை. இந்தியாவில் விளையாடியேநிதிவசூல் செய்யலாம். இங்கு விளையாடினால் ஷார்ஜாவில் எவ்வளவு நிதி வசூலாகுமோ அதைவிடஅதிகமாகவே நிதிவசூலாகும் என்றார் இல.கணேசன்.
யு.என்.ஐ.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications