பூகம்ப எதிர்ப்பு வீடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் உடைமைகளை இழந்த ஏழை மக்களுக்கு சிறிய அளவிலான பூகம்ப எதிர்ப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு சனிக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் சனிக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக பிரதமர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து நிதி வசூல்செய்யப்பட்டது. 90 நிமிடம் வசூல் செய்ததில் ரூ 10.5 லட்சம் வசூலாகியுள்ளது.

கிராமங்களில் வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திரா அவாஸ் யோஜ்னா மற்றும் கிராமின் அவாஸ் யோஜ்னா திட்டத்தின்கீழ் சிறிய அளவிலானபூகம்ப எதிர்ப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

நகர்ப்புறங்களில் இடிந்து தரைமட்டமான வீடுகளை அமைச்சர்கள் குழு ஒன்று நேரில் சென்று பரிசோதனை செய்தது. சில தனியார் அமைப்புக்களும் குஜராத்மக்களுக்கு அரசு பூகம்ப எதிர்ப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பொதுமக்களும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணமாகக் கொடுப்பதை விட, சிறிய கூடாரங்கள் அமைத்துக் கொடுக்க முன்வரலாம்.பூகம்ப எதிர்ப்பு வீடுகள் கட்டிமுடிக்கப்படும் பணி 6 முதல் 9 மாதங்களில் முடிவடையும் என்றார்.

முன்னதாக தமிழக பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகிகள் ரூ 51, 185 வசூல் செய்து குஜராத் மக்களுக்காக வெங்கய்யா நாயுடுவிடம் கொடுத்தார்கள்.பணம் தவிர, பொதுமக்கள் கம்பளிகள், மருந்துகள் மற்றும் துணி வகைகளைக் கொடுத்தார்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+