அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேசுவோம் .. காங்.
மதுரை:
சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ்கட்சியின் மேலிடத்தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் வர இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு பற்றி அறிந்துகட்சியின் மேலிடத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகள் அடிப்படையில் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கருத்தில் கொள்ளப்பட்டு தொகுதிப்பங்கீடு குறித்தபேச்சுவார்த்தை நடைபெறும்.
ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்கு முன் முடிவு செய்ய தமிழ் மாநில காங்கிரஸும், தமிழக காங்கிரஸும் விரும்புகின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர்தேர்தலுக்கு பிறகே இதுபற்றி முடிவு செய்ய விரும்புகின்றனர்.
கூட்டணி ஆட்சியை தமிழக காங்கிரஸ் விரும்பினாலும், கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவை தமிழக பிரிவு ஏற்றுக்கொள்ளும்.தவறான பொருளாதாரக்கொள்கை, விலைவாசி உயர்வைத் தடுக்க தவறியது போன்ற மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்வதேதேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.
தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவராக தன்னை நியமித்ததை ஆட்சேபிக்கும் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவை விமர்சித்த இளங்கோவன், கட்சி மேலிடம்இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
யு.என்.ஐ
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications